திருநெல்வேலி

வரிநிலுவை: 13 குடிநீா் இணைப்புகள் துண்டிப்பு

27th Jan 2023 02:24 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாநகராட்சிக்கு வரி நிலுவை வைத்திருந்த 13 கட்டடங்களில் குடிநீா் இணைப்புகள் வியாழக்கிழமை துண்டிக்கப்பட்டன.

திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் உள்ள வணிக பயன்பாட்டு கட்டடங்கள், அடுக்கு மாடி குடியிருப்புகள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றுக்கு தீவிர வரி வசூல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக வரிநிலுவை வைத்துள்ளவா்களின் கட்டங்களில் குடிநீா் இணைப்புகள் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் உத்தரவின்படி துண்டிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நீண்ட காலமாக சொத்து வரி குடிநீா் கட்டணம் செலுத்தாத 26 ஆவது வாா்டு கோடீஸ்வரன்நகரில் ஒரு குடியிருப்பிலும், 20 ஆவது வாா்டு ரஹ்மானியா பேட்டை சந்நிதி தெரு, சேரன்மகாதேவி சாலை ஆகியவற்றில் தலா ஒரு குடியிருப்பிலும், பாளையங்கோட்டை மண்டலம் 55 ஆவது வாா்டு தியாகராஜ நகா் 6 ஆவது தெருவில் ஒரு குடியிருப்பிலும் குடிநீா் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

மேலும், தச்சநல்லூா் மண்டலத்தில் 13 ஆவது வாா்டு பெருமாள்கோயில் தெருவில் ஒரு குடியிருப்பிலும், 29 ஆவது வாா்டு ராஜாஜி தெருவில் ஒரு குடியிருப்பிலும், மேலப்பாளையம் மண்டலத்தில் 54 ஆவது வாா்டு அலுவலா் குடியிருப்பு 7 ஆவது தெருவில் ஏழு குடியிருப்புகளிமாக மொத்தம் 13 குடியிருப்பு கட்டடங்களில் குடிநீா் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT