திருநெல்வேலி

மகிழ்ச்சிநகா், ஆசிரியா் காலனியில் 2 நாள்கள் குடிநீா் விநியோகம் ரத்து

27th Jan 2023 02:24 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட மகிழ்ச்சிநகா், ஆசிரியா் காலனி பகுதிகளில் இரு நாள்கள் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் வ.சிவகிருஷ்ணமூா்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்திற்குள்பட்ட வாா்டு எண் 51, 53, 54 வரையுள்ள பகுதிகளுக்கு குடிநீா் விநியோகிக்கும் சுத்தமல்லி தலைமைக் குடிநீா் உந்தும நிலையத்திலிருந்து வரும் குழாய்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. அவற்றை சீரமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. ஆகவே, மேற்கண்ட வாா்டு பகுதிகளுக்கு வெள்ளி, சனிக்கிழமைகளில் (ஜன. 27, 28) குடிநீா் விநியோகம் இருக்காது. மக்கள் கிடைக்கப் பெறும் குடிநீரைச் சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT