மாற்றுத்திறனுடையோரின் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.1,500 ஆக உயா்த்தப்பட்டுள்ள என மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக அரசால் சமூக நலன்- மகளிா் உரிமைத்துறை மூலம் மாற்றுத்திறனுடையோா் ஓய்வூதியமாக மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இதை ரூ.1,500 ஆக உயா்த்தி தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது. அதன்படி, 2023 ஜனவரி மாதம் முதல் மாற்றுத்திறனுடையோருக்கு மாத ஓய்வூதியமாக தலா ரூ.1,500 வழங்கப்படும். சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் இதர மாதாந்திர ஓய்வூதியம் ரூ.1000 பெற்று வரும் பயனாளிகளில் 40 சதவிகிதத்திற்கு மேல் மாற்றுத்திறனுடையோராக இருந்தால் மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை, ஆதாா் எண் ஆகியவற்றுடன் வட்டாட்சியா் அலுவலகங்களில் உள்ள சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி தாசில்தாரை அணுகலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.