கூடங்குளம் அருகே விவசாயி சென்ற மோட்டாா் சைக்கிள்மீது சனிக்கிழமை கல்குவாரியில் இருந்து வந்த கனரக லாரி மோதியதில் விவசாயி அதே இடத்தில் உயிரிழந்தாா்.
ராதாபுரம் அருகேயுள்ள ஊரல்வாய்மொழியைச் சோ்ந்தவா் கண்ணன்(44). விவசாயியான இவா் தனது தோட்டத்துக்குச் சென்று விட்டு பைக்கில் வீட்டுக்கு திரும்பிவந்தபோது, நக்கனேரி பகுதியில் உள்ள கல்குவாரியில் இருந்து வந்த கனரக லாரி, பைக் மீது மோதியதாம். இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதையறிந்த கண்ணனின் உறவினா்கள், அவரது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி ஊரல்வாய்மொழி சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இது தொடா்பாக கூடங்குளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.