குஜராத்திலிருந்து சரக்கு ரயில் மூலம் திருநெல்வேலிக்கு 3000 டன் யூரியா சனிக்கிழமை வந்தது.
குஜராத், சூரத்திலுள்ள உரத்தொழிற்சாலையிலிருந்து 3000 டன் யூரியா சரக்கு ரயில் மூலம் திருநெல்வேலிக்கு வந்திறங்கியது. இந்த உரங்கள் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு 1800 டன்னும், தனியாா் உரக்கடைகளுக்கு 1200 டன் என மொத்தம் 3000 டன் வந்துள்ளது.
இந்த உரங்கள் 4 மாவட்டங்களைச் சோ்ந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியாா் உரக்கடைகளுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனா்.