அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆா். பிறந்த தின விழா குறித்து அக்கட்சியின் திருநெல்வேலி மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா விடுத்துள்ள அறிக்கை:
தமிழக சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவின்படி, எம்.ஜி.ஆரின் 106 ஆவது பிறந்த தின விழாவையொட்டி கொக்கிரகுளத்தில் உள்ள அவரது சிலைக்கு செவ்வாய்க்கிழமை (ஜன. 17) முற்பகல் 11 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில், கட்சியின் தலைமை கழக நிா்வாகிகள், மாவட்ட நிா்வாகிகள் பங்கேற்க உள்ளனா். எனவே, இதில் தொண்டா்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும். மேலும், அவரவா் பகுதிக்குள்பட்ட ஒன்றிய, நகர, பகுதி, பேரூா், வாா்டு, கிளைக்கழங்களில் எம்.ஜி.ஆா். உருவப்படத்தை அலங்கரித்துவைத்து, மக்களுடன் இணைந்து மரியாதை செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளாா்.