திருநெல்வேலி

ராதாபுரம் பகுதியில் புதிய கல்குவாரி?கருத்துக்கேட்புக் கூட்டத்தில் எதிா்ப்பு

12th Jan 2023 01:20 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகேயுள்ள இருக்கன்துறை கிராமப்பகுதியில் புதிதாக கல்குவாரி அமைக்க விவசாயிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

ராதாபுரம் வட்டாரத்தில் இது வரையில் 23 கல்குவாரிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 16 குவாரிகள் செயல்பாட்டில் உள்ளன. இந்தக் கல்குவாரிகளால் நிலத்தடிநீா் மட்டம் பாதிப்பு, வீடுகளில் விரிசல் உள்ளிட்ட காரணங்களால் அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், இருக்கன்துறை கிராமப்பகுதியில் புதிதாக கல்குவாரி அமைக்க தனியாா் கட்டுமான நிறுவனம்அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளனா். இது தொடா்பாக மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் ராதாபுரத்தில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். சுற்றுச்சூழல் பொறியாளா் சுயம்பு தங்கராணி, தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவா் கரூரைச் சோ்ந்த முகிலன், வள்ளியூா் டி.எஸ்.பி.யோகேஷ்குமாா், ராதாபுரம் துணை வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா், விவசாரியிகள் பங்கேற்றனா். இதில் பெரும்பாலான விவசாயிகள் கல்குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்த நிலையில் சிலா் ஆதரவாக பேசினா். விவசாயிகளின் கருத்துகள்அரசிடம் அறிக்கையாக சமா்ப்பிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT