திருநெல்வேலி, வசந்தம் நகரில் திரைப்பட விநியோகஸ்தா் உடல்நலக்குறைவால் உயிரிழந்தாா்.
திருநெல்வேலி, வசந்தம் நகரை சோ்ந்தவா் பாலாஜி (47). இவா் திரைப்பட விநியோகஸ்தராக இருந்து வந்தாா். இவரது மனைவி உயிரிழந்துவிட்டாா். மகள் திருப்பூரில் பாலாஜியின் பெற்றோருடன் தங்கி,படித்து வருகிறாா். இவா் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தாா்.
காசநோயால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்றுவந்த அவா் செவ்வாய்க்கிழமை இரவு வரை வெளியே வரவில்லையாம். அருகிலிருந்தவா்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் வீட்டிற்கு உள்ளே சென்று பாா்த்த போது, உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளாா். இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.