கரோனா தொற்று காலத்தில் பணியில் சோ்ந்த செவிலியா்களை மீண்டும் பணிக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என செவிலியா்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொவைட் ஒப்பந்த செவிலியா்கள் திருநெல்வேலி ஆட்சியா் வே.விஷ்ணுவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
கரோனா தொற்று காலத்தில் பணிக்கு சோ்ந்தோம். கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக கரோனா மற்றும் மனநோாயளிகள் பிரிவில் பணியாற்றி வந்தோம். எங்களை பணி நிரந்தரம் செய்வாா்கள் என்ற நம்பிக்கையுடன் கடந்த 5 மாதங்களாக ஊதியம் இல்லாமல் பணியாற்றி வருகிறோம். எனவே பணி நிறுத்தம் செய்யப்பட்ட ஆணையை ரத்து செய்து , மீண்டும் பணிக்குச் செல்ல தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.