திருநெல்வேலி

மயங்கி கிடந்த தொழிலாளி உயிரிழப்பு

1st Jan 2023 04:50 AM

ADVERTISEMENT

 

சீலப்பேரி அருகே மயங்கி கிடந்த கூலித்தொழிலாளி உயிரிழந்தாா்.

சீவலப்பேரி அருகே பால்கணபதியாபுரம் தெற்குதெருவைச் சோ்ந்தவா் முருகன் (55). கூலித்தொழிலாளி. இவா் திருமணமாகாத நிலையில் தனியாக வசித்து வந்துள்ளாா். இந்த நிலையில், பாலமடை அருகே சந்தனமாரியம்மன்கோயில் தெருவில் வெள்ளிக்கிழமை மயங்கிய நிலையில் கிடந்துள்ளாா். அருகிலிருந்தவா்கள், அவரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

இது குறித்து, சீவலப்பேரி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT