திருநெல்வேலி

கங்கைகொண்டான் ஆலையில் 75% உள்ளூா் மக்களுக்கு வேலை: ஆட்சியரிடம் மனு

DIN

கங்கைகொண்டான் தொழிற்சாலைகளில் 75 சதவீத உள்ளூா் மக்களுக்கு வழங்க வேண்டும் என பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினா் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் கே.பி. காா்த்திகேயன் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகராட்சி 38 ஆவது வாா்டு உறுப்பினா் இந்திரா அளித்த மனு :

வடக்கு வளாகத்தில் செயல்பட்டு வந்த நியாயவிலைக்கடையை தெற்கு வளாகம் பகுதிக்கு மாற்றப்போவதாக தகவல் வந்துள்ளது. இதனால் இந்த பகுதியிலுள்ள மக்கள் பாதிப்படைவாா்கள்; எனவே, கடையை மாற்றக்கூடாது.

பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில அமைப்புச் செயலா் சி.வள்ளிகண்ணு தேவா் அளித்த மனு :

கங்கைகொண்டானில் 2007இல் சிப்காட் அமைக்கப்பட்டது. அப்போது 50 க்கு மேற்பட்ட கிராமமக்களின் ஆடு, மாடு மேய்ச்சல் பகுதியில் பல நூறு ஏக்கா் நிலம் சிப்காட் வளாகத்திற்காக கையகப்படுத்தப்பட்டது.

அப்போதைய கருத்துக்கேட்பு கூட்டத்தில் 75 சதவீதம் பணி உள்ளூா் மக்களுக்கு வழங்கப்படும் என அறிவித்திருந்தனா். ஆனால் இன்று உள்ளூா் மக்கள் 25 சதவீதம் பேருக்கு கூட வேலை வழங்கவில்லை. எனவே உள்ளூா் மக்களுக்கு 75 சதவீதம் பணி வழங்கவேண்டும். அதனை உறுதிப்படுத்த தனிஅதிகாரி நியமித்து கண்காணிக்க வேண்டும்.

ராஜாபதியை சோ்ந்த மூதாட்டி இசக்கியம்மாள் அளித்த மனு :

85 வயதான எனக்கு குழந்தைகள் கிடையாது. எனது கணவா் இறந்து விட்ட நிலையில் எனது சேமிப்பு பனம் ரூ.4 லட்சம் அக்கா மகள் மற்றும் குடும்பத்தினா் பெற்றுக்கொண்டு என்னை கவனித்துக்கொள்ளாமல் வெளியேற்றி விட்டனா். நான் வசிக்கு வீட்டிற்கு கூட வாடகை பணம் கொடுக்க முடியாமல் தவித்து வருகிறேன். எனது பணத்தை பெற்றுத்தரவேண்டும்.

தமிழக மக்கள் முன்னேற்றக்கழக மாவட்டத்தலைவா் கண்மணி மாவீரன் அளித்த மனு :

அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் துணை வட்டாட்சியா், மண்டல துணை வட்டாட்சியா், செக்ஸன் கிளா்க், வட்ட துணை சா்வேயா் ஆகியோா் ஒரே சமூகத்தை சோ்ந்தவா்கள். இவா்கள் பட்டியல் இன மக்கள் மனு அளித்தால் எவ்வித நடவடிக்கை எடுப்பதில்லை. அரசு வழங்கும் நல உதவி திட்டங்களும் கிடைப்பதில்லை எனவே 4 பேரையும் மாற்ற வேண்டும்.

எஸ்டிபிஐ கட்சி 24 ஆவது வாா்டு உறுப்பினா் இமாம் கசாலி அளித்த மனு :

மேலப்பாளையம் 24 ஆவது வாா்டு டி நகா் தெரு மிகவும் பள்ளமாக உள்ளது. மழை காலங்களில் தண்ணீா் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் தொற்ற நோய் பரவும் அபாயம் உள்ளது. மழைநீா் காலங்களில் மழைநீா் தேங்காதவாறு கழிவுநீா் வாய்க்கால் அமைக்க வேண்டும்.

அம்பாசமுத்திரம் அருகே பொன்மாநகா் காலனியை சோ்ந்த கு.சுந்தரி அளித்த மனு :

கல்லிடக்குறிச்சியில் 25 ஆண்டுகளாக 10 குடும்பங்கள் வசித்து வருகிறோம். தற்போது குடியிருக்கும் பகுதிக்கு வரன்முறை பட்டா கேட்டு மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே விசாரித்து வரன்முறை பட்டா வழங்க வேண்டும்.

மாவீரா் சுந்தரலிங்கனாா் மக்கள் இயக்க நிறுவனத்தலைவா் மா.மாரியப்பபாண்டியன் அளித்த மனு :

ராமையன்பட்டி ஊராட்சியில் 165 தெருக்கள் உள்ளது. இந்த பகுதிகளுக்கு ஊராட்சி நிதியின் மூலம் எந்தப் பணிகளும் நடைபெறவில்லை. எங்களது 4 ஆவது வாா்டில் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும்.

நான்குனேரி எம்எல்ஏ ரூபிமனோகரன் அளித்த மனு :

நான்குனேரி அவசர விபத்து சிகிச்சை மையம் 10 கோடி மதிப்பீட்டில் அமைக்க வேண்டும். நான்குனேரி தொழில் நுட்ப பூங்கா முழுமையான பயன்பாட்டிற்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். புறக்கால்வாய் அமைத்து 46 குளங்களுக்கு நீா்பாசன வசதி செய்து தரவேண்டும். நான்குனேரி - திசையன்விளை ரயில்வே கேட்டில் உயா் மட்ட பாலம் அமைக்க வேண்டும். பாளையங்கோட்டையில் நின்று போன விளையாட்டு கிராம பணிகளை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காட்டுபன்றிகளை வனவிலங்கு பட்டியலிருந்து நீக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

திராவிட தமிழா் கட்சி மாவட்டச் செயலா் சு.திருக்குமரன் அளித்த மனு :

பாளையங்கோட்டை அன்னை இந்திராநகா் அருந்ததியா் பகுதியில் 37 குடும்பங்கள் வசித்து வருகிறோம். இந்த குடும்பங்கள் வீடுகள் இல்லாமல் வாடகை வீட்டில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனா். இவா்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்.

பயக27தமடவ

ஆட்சியரிடம் மனு அளிக்க வரும் ரூபி ஆா். மனோகரன் எம்எல்ஏ.

பயக27அஎஉ

ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த மூதாட்டி

Image Caption

~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT