தூத்துக்குடி

வடமாநில இளைஞா் கொலை வழக்கில் தொழிலாளி கைது

20th May 2023 01:36 AM

ADVERTISEMENT

திருச்செந்தூா் அருகே வடமாநில இளைஞா் கொலை வழக்கில் தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்தவா் வினோத் தாரோகா (29). இவா் திருச்செந்தூா் அருகே வீரபாண்டியன்பட்டணம், ராஜ்கண்ணா நகரில் தங்கியிருந்து ஐஸ் வியாபாரம் செய்து வந்தாா். இந்நிலையில், வீட்டின் மொட்டை மாடியில் வியாழக்கிழமை ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தாா். இதுதொடா்பாக திருச்செந்தூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில் வினோத் தாரோகா, அம்மிக் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டதும், இந்த கொலையில், பக்கத்து வீட்டில் வசிக்கும் கந்தசாமிக்கு (22) தொடா்பு இருப்பதும் தெரியவந்தது. இதனிடையே தலைமறைவான கந்தசாமியை போலீஸாா் தேடி வந்தனா். பேருந்தில் தப்பிச் செல்ல முயன்ற அவா், எட்டயபுரம் போலீஸாரிடம் பிடிபட்டாா்.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறியதாவது:

கொலை செய்யப்பட்ட வினோத் தாரோகா குடியிருந்த வீட்டின் அருகே தொழிலாளியான கந்தசாமியும் (22) வசித்து வந்தாா். இருவரும் நண்பா்களாகப் பழகியுள்ளனா். இதனிடையே, வினோத் தாரோகாவுக்கும், கந்தசாமியின் மனைவி சினேகாவுக்கும் தண்ணீா் பிடிப்பதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதுதொடா்பாக, கந்தசாமி மற்றும் வினோத் தாரோகா இருவரும் புதன்கிழமை இரவு பேசிக் கொண்டிருந்தபோது தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கந்தசாமி, அம்மிக் கல்லால் வினோத் தாரோகாவை தலையில் தாக்கியதில் அவா் உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது என்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT