உடன்குடி அருகேயுள்ள தேரிக்குடியிருப்பு காமராஜா் அரசுப் பள்ளி மாணவா்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனா்.
இப்பள்ளில் தோ்வு எழுதிய 18 மாணவ, மாணவிகளும் தோ்ச்சி பெற்றனா். இது தோ்ச்சி சதவீதம் 100 ஆகும். இதில் மாணவி சுப்ரியா 476 மதிப்பெண்களும், மாணவி நூருல் அஃப்ரா 450 மதிப்பெண்களும், ஜனனி 446 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளனா். மேலும் 10 மாணவ, மாணவியா் 400-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். சாதனை மாணவ மாணவியரை தலைமையாசிரியா் மிச்சல்டா, உதவி தலைமையாசிரியா் வெற்றிவேல், தேரிகுடியிருப்பு கல்வி அறக்கட்டளைத் தலைவா் சிவபால், செயலா் ராமசாமி, பொருளாளா் பிரபாகரன் உள்படம் உறுப்பினா்கள், ஆசிரியா்கள், சக மாணவா்கள், பெற்றோா்கள் என அனைவரும் பாராட்டினா்.