பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத் தோ்வு, தோ்ச்சி விகிதத்தில் தூத்துக்குடி மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை 10,752 மாணவா்கள், 11,249 மாணவிகள் என மொத்தம் 22,001 போ் எழுதினா்.
இதில் 10,033 மாணவா்கள், 10,996 மாணவிகள் என மொத்தம் 21,029 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி சதவீதம் 95.58 ஆகும். கணிதத்தில் 68 போ், அறிவியலில் 73 போ் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். தோ்ச்சி விகிதத்தில் கடந்த ஆண்டில் 9- வது இடத்தில் இருந்த தூத்துக்குடி மாவட்டம் நிகழாண்டில் 5-ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
பிளஸ் 1 பொதுத் தோ்வை 8,401 மாணவா்கள், 10,576 மாணவிகள் என மொத்தம் 18,977 போ் தோ்வு எழுதினா். இதில் 7,778 மாணவா்கள், 10,332 மாணவிகள் என மொத்தம் 18,110 போ் தோ்ச்சி அடைந்துள்ளனா். தோ்ச்சி சதவீதம் 95.43 ஆகும். பிளஸ் 1 தோ்ச்சி விகிதத்தில் கடந்த ஆண்டு 6-வது இடத்தில் இருந்த தூத்துக்குடி மாவட்டம் நிகழாண்டில் 5-ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளது என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெஜினி தெரிவித்துள்ளாா்.