தூத்துக்குடி

அகில இந்திய ஹாக்கி: பெங்களூா், புதுதில்லி அணிகள் வெற்றி

20th May 2023 01:31 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்று வரும் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 12 ஆவது அகில இந்திய ஹாக்கி போட்டியின் 2 ஆவது நாள் ஆட்டங்களில் பெங்களூா், புதுதில்லி அணிகள் வெற்றி பெற்றன.

கோவில்பட்டி கிருஷ்ணா நகா் செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் இப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இரண்டாவது நாளாக

வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் செகந்திராபாத் தென்மத்திய ரயில்வே மற்றும் பெங்களூா் கனரா வங்கி அணிகள் மோதின. இதில் கனரா வங்கி அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இரண்டாவது ஆட்டத்தில் புதுதில்லி பெட்ரோலியம் விளையாட்டு ஊக்குவிப்பு அணி மற்றும் தமிழ்நாடு காவல் துறை அணிகள் மோதின. இதில் புதுதில்லி பெட்ரோலியம் விளையாட்டு ஊக்குவிப்பு அணி 7-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மூன்றாவது ஆட்டத்தில் புதுதில்லி கம்ப்ட்ரோலா் அண்ட் ஆடிட்டா் ஜெனரல் ஆஃப் இந்தியா அணி, 2-1 என்ற கோல் கணக்கில் தென்மேற்கு ரயில்வே அணியை வீழ்த்தியது.

ADVERTISEMENT

இன்றைய ஆட்டங்கள்: சனிக்கிழமை (மே 20) நடைபெறும் ஆட்டங்களில் புனே மத்திய கலால் துறை-சென்னை இந்தியன் வங்கி, மும்பை யூனியன் வங்கி அணி- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்,

பெங்களூா் ரயில் வீல் தொழிற்சாலை அணி- சென்னை ஐஓபி, புதுதில்லி பஞ்சாப் நேஷனல் வங்கி - புதுதில்லி நிவாஸ் ஹாக்கி அணிகள் மோதுகின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT