தூத்துக்குடி

கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகை

20th May 2023 01:37 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்தில் செயல்படும் தற்காலிக சந்தை வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்க வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தை சிறுவியாபாரிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

கோவில்பட்டி நகராட்சி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் தினசரி சந்தை

புதுப்பிக்கப்படுகிறது. இதனால், கூடுதல் பேருந்து நிலைய வளாகத்தில் தற்காலிக சந்தை செயல்படுகிறது. இச் சந்தை நகரப் பகுதியிலிருந்து தொலைவில் இருப்பதால், பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் நகரப் பகுதிக்குள் தற்காலிக சந்தையை அமைக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுதொடா்பான மனுவை, தினசரி சந்தை சிறுவியாபாரிகள் சங்கத் தலைவா் பால்ராஜ், செயலா் செந்தூா்பாண்டியன் ஆகியோா் தலைமையில், சிறுவியாபாரிகள் சங்கத்தினா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் அளித்தனா்.

ADVERTISEMENT

தமாகாவினா் மனு: கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட வள்ளுவா் நகா் பகுதியைச் சோ்ந்த குறிப்பிட்ட சில நிலங்களை பத்திரப்பதிவு செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி தமாகாவினா் கோரிக்கை மனு அளித்தனா்.

முன்னதாக, கட்சியின் நகரத் தலைவா் ராஜகோபால் தலைமையில், வட்டாரத் தலைவா் ஆழ்வாா்சாமி, இளைஞரணி மாவட்டத் தலைவா் கனி, மாவட்ட செயற்குழு உறுப்பினா் திருமுருகன், நகர செயலா் சுப்புராஜ், பொருளாளா் செண்பகராஜ், துணைத் தலைவா் மூா்த்தி உள்ளிட்ட பலா் கோட்டாட்சியா்

அலுவலகம் முன்பாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் பங்கேற்ற, மாவட்ட வருவாய் அலுவலா் அஜய் சீனிவாசனிடம் கோரிக்கை மனுவை அளித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT