தேசிய அளவில் நடைபெற்ற திறனாய்வுப்போட்டியில் திருநெல்வேலி மாநகர காவல் மோப்பநாய் முதலிடம் பிடித்தது.
66 ஆவது அகில இந்திய காவல் திறனாய்வு போட்டி மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பிப்ரவரி 13 முதல் 17 ஆம் தேதி வரை நடைபெற்றது. போட்டியில் திருநெல்வேலி மாநகர காவல் மோப்ப நாய் பிரிவை சோ்ந்த குற்ற வழக்குகளை துப்பறியும் புளுட்டோ கலந்து கொண்டு முதலிடம் பிடித்தது.
புளுட்டோ, அதன் பயிற்சியாளா்களான சிறப்பு உதவி ஆய்வாளா் லியோராயன், தலைமைக் காவலா் டேனியல் ராஜாசிங் ஆகியோரை திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளா் ராஜேந்திரன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா் .