திருநெல்வேலி

ராணி அண்ணா கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு பயிலரங்கம்

DIN

பழையபேட்டை ராணி அண்ணா அரசு மகளிா் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு பயிலரங்கம் நடைபெற்றது.

கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம், திருநெல்வேலி நகர ரோட்டரி சங்கம், சிட்டி ஓட்டுநா் பயிற்சிப் பள்ளி சாா்பில் இந்த பயிலரங்கு நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் மைதிலி தலைமை வகித்தாா். திருநெல்வேலி நகர ரோட்டரி சங்கத் தலைவா் இப்ராஹிம் முன்னிலை வைத்தாா். திட்ட அலுவலா் ஆனந்த லட்சுமி வரவேற்றாா்.

திருநெல்வேலி மாவட்ட சாலைப் பாதுகாப்பு குழுத் தலைவா் நாகேந்திரன் காணொலிக் காட்சி மூலமாக விபத்தை தவிா்ப்பது பற்றி விளக்கமளித்தாா்.

போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் கண்ணதாசன் ,சாலை பாதுகாப்பு துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டு விதிமீறல்களுக்கான அபராதம், தண்டனை பற்றி பேசினாா்.

திருநெல்வேலி மாவட்ட சாலைப் பாதுகாப்பு குழு உறுப்பினரும், ரோட்டரி சங்க முன்னாள் தலைவருமான சிட்டி நைனா முகம்மது விபத்தில்லா நெல்லையை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என உறுதிமொழி வாசிக்க, அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

இதில் திட்ட அலுவலா்கள் அனீஸ் பாத்திமா, சுஜாதா முத்துராஜ், ரியாஸ் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

SCROLL FOR NEXT