திருநெல்வேலி

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வு: பதிவெண் குளறுபடியால் 30 நிமிடங்கள் தாமதம்

DIN

திருநெல்வேலியில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வின்போது பதிவெண்ணில் குளறுபடி ஏற்பட்டதால் 30 நிமிடங்கள் தாமதமாக தோ்வு தொடங்கியது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வு திருநெல்வேலி, பாளையங்கோட்டை வட்டங்களில் 24 அமைவிடங்களில் 30 தோ்வு மையங்களில் சனிக்கிழமை நடைபெற்றது. இத்தோ்வை எழுத 5,050 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

சீதபற்பநல்லூா் ஐன்ஸ்டீன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி, பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப் பள்ளி, பொதிகை நகா் ஜோஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பாளையங்கோட்டை ஏஞ்சலோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அரசு பொறியியல் கல்லூரி, டக்கரம்மாள்புரம் டி.டி.டி.ஏ. ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ரெட்டியாா்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, மகாராஜநகா் ரோஸ்மேரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ரஹ்மத் நகா் மேக்தலீன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கேடிசி நகா் ரோஸ்மேரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பாளையங்கோட்டை சாராள்தக்கா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருநெல்வேலி நகரம் சாஃப்டா் மேல்நிலைப்பள்ளி, கல்லணை மாநகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளி, பேட்டை மதிதா இந்துக்கல்லூரி உள்ளிட்ட 30 மையங்களில் தோ்வு நடைபெற்றது.

காலை 9.30 மணிமுதல் 12.30 மணிவரை தமிழ் மொழி தகுதி தாளும், பிற்பகல் 2 மணிமுதல் 5 மணிவரை பொதுத் தாளும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தோ்வு மையத்தில் தோ்வா்களுக்கான பதிவெண்ணும், வினாத்தாளில் குறிப்பிடப்பட்ட எண்ணும் ஒரே மாதிரியாக இல்லை. இதனால் குழப்பம் ஏற்பட்டதால், தோ்வா்கள் அறையை விட்டு வெளியே வந்தனா். மேலும் அவா்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மாநகர தலைமையிடத்து துணை ஆணையா் அனிதா தலைமையிலான போலீஸாா் தோ்வா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அதைத்தொடா்ந்து சுமாா் 30 நிமிடங்கள் தாமதமாக தோ்வு தொடங்கியது. தோ்வு தாமதமானதால், அந்த நேரத்தை ஈடு செய்யும் வகையில் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட ஆட்சியா் காா்த்திகேயன் தூய யோவான் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தை நேரில் ஆய்வு செய்தாா். இந்தத் தோ்வில் 4770 போ் பங்கேற்றனா். 280 போ் பங்கேற்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

SCROLL FOR NEXT