திருநெல்வேலி

சாலையோர வியாபாரிகள் கணக்கெடுப்பு பணிநாளை தொடக்கம்

DIN

திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் சாலையோர வியாபாரிகள் புதிய கணக்கெடுப்புப் பணி திங்கள்கிழமை(பிப்.27) தொடங்குகிறது.

இது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் சிவகிருஷ்ணமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் சாலையோர வியாபாரிகளுக்கான திட்டத்தின் கீழ், தகுதியான சாலையோர வியாபாரிகளின் சமூக பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தினை உறுதி செய்திட நடப்பாண்டில் புதிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அவா்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

கணக்கெடுக்கும் பணியானது வரும் திங்கள்கிழமை தொடங்கி, மாா்ச் இறுதி வரை நடைபெறும். கணக்கெடுப்பு பணியாளா் கோரும் விவரங்கள், ரேஷன் காா்டு நகல், வாக்காளா் அடையாள அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் நகல், போன்ற ஆவணங்களை பணி செய்ய வரும் பணியாளா்களிடம் வழங்கிட வேண்டும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT