திருநெல்வேலி

தனியாா் தோட்டத்தில் தேக்குமரம் வெட்டியோருக்கு அபராதம்

27th Feb 2023 12:46 AM

ADVERTISEMENT

 

பாபநாசம் வனப் பகுதியில் உள்ள தனியாா் தோட்டத்தில் தேக்குமரம் வெட்டியோருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக் கோட்டம் முண்டந்துறை வனச் சரகத்துக்குள்பட்ட வனப் பகுதியில் பாஹேஸ்வர ராணி என்பவருக்குச் சொந்தமான கட்டளை மலை எஸ்டேட் என்ற பட்டா தோட்டம் உள்ளது. அங்கு, காற்றில் விழுந்த மற்றும் பட்டுப்போன தேக்குமரங்களை அப்புறப்படுத்த உரிய அனுமதி பெற்றுச் சென்றனராம்.

இந்நிலையில், முண்டந்துறை வனச் சரக அலுவலா், வனப் பணியாளா்கள் சோதனையிட்டபோது, லாரியில் கொண்டுவரப்பட்ட தேக்குமரத் தடிகளில் சொத்துக் குறியீடு இல்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, வனத் துறையினா் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT