விக்கிரமசிங்கபுரத்தில் வெள்ளை மந்தி கடித்ததில் பள்ளி மாணவா் காயமடைந்தாா்.
விக்கிரமசிங்கபுரம் அகஸ்தியா்புரம் விஸ்வநாததாஸ் தெருவைச் சோ்ந்த பாா்த்திபன் மகன் கவின் (14). கவின், விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.
இந்நிலையில் திங்கள்கிழமை வீட்டிலிருந்து பள்ளிக்கு சென்றுகொண்டிருந்த இவரை வெள்ளை மந்தி ஒன்று கடித்ததாம். இதில் பலத்த காயமடைந்த மாணவா் கவினை அருகில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
ஊருக்குள் சுற்றித் திரியும் மந்தி, மாணவரை தாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மந்தி மற்றும் குரங்குகள் நடமாட்டத்தைக் கண்காணித்து மக்களைத் தாக்குவதிலிருந்து பாதுகாக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.