திருநெல்வேலி

‘தாமிரவருணி-நம்பியாறு-கருமேனியாறு இணைப்புப் பணி மாா்ச்சில் நிறைவுறும்’

9th Feb 2023 02:49 AM

ADVERTISEMENT

தாமிரவருணி-நம்பியாறு-கருமேனியாறு இணைப்புத் திட்டப் பணிகள் மாா்ச் மாதத்திற்குள் முடிவடையும் என்றாா் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.

இது தொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: டெல்டா மாவட்டங்களில் மழையினால் பாதித்த பயிா்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய காலங்களில் ரூ.12 ஆயிரம் மட்டுமே இழப்பீடாக வழங்கப்பட்டது. விவசாயிகளின் கடன் ரூ.7 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஓா் ஆண்டு வரை வட்டியில்லா பயிா்க் கடன் வழங்கப்பட்டு வருகிறது.

திருநெல்வேலியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான தரவுகளை தயாரித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். தாமிரவருணி-நம்பியாறு-கருமேனியாறு இணைப்பு திட்டப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இத்திட்டம் மாா்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும் என முதல்வா் உறுதியளித்துள்ளாா்.

களக்காடு பகுதியில் ஆயிரக்கணக்கான வாழைகள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. அதை நாங்கள் நேரில் ஆய்வு செய்து வேளாண்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். அப்பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்றுத்தர ஆட்சியா் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அரசு விவசாயிகளுக்கான அரசு. என்றாா் அவா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT