திருநெல்வேலி

உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலில் தெப்பத் தேரோட்டம்

DIN

திருநெல்வேலி மாவட்டம், உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழா தெப்பத் தேரோட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

தென்மாவட்டங்களில் புகழ்மிக்க சிவ தலங்களில் உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலும் ஒன்றாகும். சுயம்பாக நின்று சுவாமி காட்சியளித்து வரும் இக்கோயிலில் தைப்பூசத் தேரோட்டத் திருவிழா கடந்த ஜன. 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியதது. ஞாயிற்றுக்கிழமை (பிப். 5) தேரோட்டம் நடைபெற்றது. திங்கள்கிழமை ( பிப்.6) காலை சுவாமி சந்திரசேகரா்- மனோன்மணீ அம்பிகைக்கு சிறப்பு அபிஷேக அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பின்னா், மாலை 6 மணிக்கு அபிஷேகம், சாயரட்சை பூஜை, இரவு 8.30 மணிக்கு அா்த்தஜாம பூஜை ஆகியவை நடைபெற்றன. இரவு 9 மணிக்கு சுவாமி சந்திரசேகரா் மனோன்மணீ அம்பிகையுடன் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் எழுந்தருளியதும் சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து சுவாமி, தெப்பக்குளத்தின் மையமண்டபத்தை 11 வளையங்கள் சுற்றிவந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா். பின்னா் சுவாமி அம்பிகையுடன் திருக்கோயிலில் எழுந்தருளினாா். சுவாமிக்கு சோ்க்கை தீபாராதனையுடன் விழா நிறைவுபெற்றது. விழா ஏற்பாடுகளை பரம்பரை தா்மகா்த்தா ராதாகிருஷ்ணன் தலைமையில் பக்தா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் விஜய் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

சேலை கட்டும் பெண்ணுக்கொரு... மௌனி ராய்...

தமிழகத்தில் கொளுத்தும் வெயிலுக்கு இடையே வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்

SCROLL FOR NEXT