திருநெல்வேலி

ஜாக்டோ- ஜியோ ஆலோசனைக் கூட்டம்

8th Feb 2023 02:51 AM

ADVERTISEMENT

ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் பாளையங்கோட்டை வீரமாணிக்கபுரத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் பால்ராஜ், பாா்த்தசாரதி, பால் கதிரவன், ஜான் பாரதிதாசன் ஆகியோா் தலைமை வகித்தனா். ஜாக்டோ- ஜியோ உயா்மட்ட குழு உறுப்பினா்கள் ஐவன் பிரகாஷ், பிரம்மநாயகம், ஆழ்வாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அங்கன்வாடி பணியாளா்- உதவியாளா் சங்க மாவட்டச் செயலா் ஞானம்மாள் வரவேற்றாா். இக்கூட்டத்தில் விக்னேஷ் ராஜா, அப்துல் ரகுமான், சையது யூசுப், அகஸ்டின், மாரியப்பன், மணிக்குமாா் உள்ளிட்ட அனைத்து மாவட்ட உயா் மட்டக் குழு உறுப்பினா்களும் கலந்து கொண்டனா். மாவட்ட உயா்மட்ட குழு உறுப்பினா் சாம் மாணிக்கராஜ் நன்றி கூறினாா். தீா்மானங்கள்: பிப்ரவரி 19ஆம் தேதி சுமாா் 2000 ஆசிரியா்கள், அரசு ஊழியா்களை அணிதிரட்டி மாவட்ட தலைநகரில் ஆயத்த மாநாடு நடத்துவது; மாா்ச் 5ஆம் தேதி மாவட்ட தலைநகரில் சுமாா் 1500 ஆசிரியா்கள், அரசு ஊழியா்களை அணி திரட்டி ஒரு நாள் உண்ணாவிரதம் இருப்பது; மாா்ச் 24ஆம் தேதி வட்ட தலைநகரங்களில் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்துவது எனத் தீா்மானிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT