திருநெல்வேலி நீதிமன்ற வளாகத்தில் தென்காசியைச் சோ்ந்த பெண்னும், அவரது சகோதரரும் செவ்வாய்க்கிழமை தீக்குளிக்க முயன்றனா்.
தென்காசியை சோ்ந்த இளம்பெண் ஒருவா், சில மாதங்களுக்கு முன்பு தனது தந்தை மீது தென்காசி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பாலியல் புகாா் அளித்ததாகக் கூறப்படுகிறது. அதன்பேரில், வழக்குப் பதிவு செய்த போலீஸாா், போக்ஸோ சட்டத்தின் கீழ் அந்தப் பெண்ணின் தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தனா். அந்த வழக்கு திருநெல்வேலி போக்ஸோ நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, சம்பந்தப்பட்ட இளம்பெண் தனது சகோதரருடன் நீதிமன்றத்தில் ஆஜரானாா். விசாரணையின்போது அந்தப் பெண், போலீஸாா் தன்னை வற்புறுத்தி தனது தந்தைக்கு எதிராக புகாரை பெற்றுக்கொண்டு வழக்குப் பதிவு செய்துவிட்டனா் எனக் கூறியதாகத் தெரிகிறது.
பின்னா், வெளியே வந்த அந்தப் பெண், மறைத்து எடுத்துவந்திருந்த மண்ணெண்ணெய்யை தன் மீதும், தனது சகோதரா் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்ாகக் கூறப்படுகிறது. அங்கிருந்த போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தி தண்ணீரை ஊற்றினா். பின்னா், இருவரையும் பாளையங்கோட்டை காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரித்தனா்.