திருநெல்வேலி

மீனாட்சிபுரம் கிளை நூலகத்தில் தேவநேயப் பாவாணா் பிறந்த தினம்

8th Feb 2023 01:01 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரம் கிளை நூலகம், தாமிரபரணி வாசகா் வட்டம் சாா்பில் தேவநேயப் பாவாணரின் 122 ஆவது பிறந்த தின விழா நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, மாவட்ட மைய நூலக வாசகா் வட்ட துணைத் தலைவா் கவிஞா் கோ. கணபதி சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். தாமிரபரணி வாசகா் வட்டத் தலைவா் கா. சரவணகுமாா் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக கவிஞா் புத்தனேரி கோ. செல்லப்பா, பல்சமயப் பணிக்குழு ஒருங்கிணைப்பாளா் ஜெபசிங் ஆகியோா் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினா்.

கவிஞா் சுப்பையா, வாசகா்கள் சீனிவாசன், சுப்பிரமணியன், பொன்னையா ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். தேவநேயப் பாவாணா் குறித்து மாணவா்கள் பிரம்ம கணபதி, முத்து, மாலையப்பன் ஆகியோா் கருத்துரை வழங்கினா்.

நூலகா் அகிலன் முத்துகுமாா் நன்றி கூறினாா். தேவநேயப் பாவாணா் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கருத்துரை வழங்கிய மாணவா்களுக்கு புத்தகம் பரிசளிக்கப்பட்டது. தேவநேயப் பாவாணருடைய படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT