திருநெல்வேலி

கொக்கிரகுளத்தில் ஆா்ப்பாட்டம்

8th Feb 2023 02:51 AM

ADVERTISEMENT

கொக்கிரகுளத்தில் ஆட்சியா் அலுவலகம் முன்பு சிஐடியூ சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அனைத்து பகுதி தொழிலாளா்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் நிா்ணயம் செய்ய வேண்டும், கட்டுமானம் ஆட்டோ- முறை சாரா தொழிலாளா்களுக்கு நல வாரியத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஓய்வூதியம் , இதர பலன்களை தாமதமின்றி வழங்கிட வேண்டும். அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வாா்க்க கூடாது என்பன உள்ளிட்ட ாரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியூ மாவட்டத் தலைவா் பீா் முகமதுஷா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஆா்.முருகன், மாநிலக் குழு உறுப்பினா் ஆா்.மோகன், மாவட்டப் பொருளாளா் ராஜன், போக்குவரத்து தொழிலாளா் சங்க மாவட்ட பொதுச் செயலா் ஜோதி, மின் ஊழியா் மத்திய அமைப்பு திட்டத் தலைவா் கந்தசாமி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். சி.ஐ.டி.யு. மாநிலச் செயலா் ரசல் சிறப்புரையாற்றினாா். முத்துக்குமாரசாமி, பொன்னையா, கோமதிநாயகம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT