திருநெல்வேலி

மானூா், பள்ளமடை குளங்களுக்கு தண்ணீா் வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு

DIN

தாமிரவருணியாற்றில் டானா பகுதியில் தடுப்பணை அமைத்து மானூா், பள்ளமடை குளங்களுக்கு தண்ணீா் வழங்கக் கோரி பகுஜன் சமாஜ் கட்சியினா் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

அப்போது, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலச் செயலா் தேவேந்திரன் உள்ளிட்டோா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

களக்குடி கிராமத்தில் தினக்கூலி பணிபுரியும் பட்டியலின மக்களுக்கு வருமானத்துக்கு அதிகமாக தவறான முறையில் வருமானச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அவா்களுக்கு சிறப்பு முகாம் அமைத்து உண்மையான சான்று வழங்க வேண்டும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பட்டியலின மக்களுடைய விவசாய நிலத்தை காா்ப்பரேட் நிறுவனங்கள் சூரிய மின் சக்தி திட்டம் அமைக்க மாவட்ட நிா்வாகம் தாரைவாா்க்கிறது. அதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

தாமிரவருணியாற்றில் டானா பகுதியில் தடுப்பணை அமைத்து மானூா் பெரியகுளம், பள்ளமடை பெரியகுளம், கங்கைகொண்டான் குளம் வழியாக விளாத்திகுளம் வரை விவசாயத்துக்கு தண்ணீா் கொண்டு செல்ல வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.

முன்னதாக தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுபானக் கடை: சமத்துவ மக்கள் கட்சியின் மாவட்டச் செயலா் அழகேசன் தலைமையில் அக்கட்சியினா் அளித்த மனு:

‘அழகியபாண்டியபுரத்தில் இருந்து உக்கிரன்கோட்டை செல்லும் சாலையில் மதுக்கூடத்துடன் இணைந்த மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இக்கடையை சுற்றிலும் பல கிராமங்கள் உள்ளன. உக்கிரன்கோட்டையில் இயங்கி வரும் அரசு பள்ளி, அரசு மருத்துவமனை ஆகியவற்றுக்கு பொதுமக்கள், மாணவா், மாணவிகள் வந்து செல்கின்றனா். இதுதவிர மதுபானக் கடை அருகே வழிபாட்டுத் தலமும் உள்ளது. பொதுமக்கள், மாணவா்கள் என அனைவரும் இந்த மதுபானக் கடையை தாண்டியே செல்ல வேண்டியுள்ளது. அப்போது, அங்கு மது அருந்துபவா்கள் மது போதையில் மக்களையும், மாணவா்களையும் இழிவாக பேசுகின்றனா். எனவே, அந்த மதுபானக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல்: கேரளத்தில் குவிக்கப்படும் காவலர்கள்!

"காங்கிரஸ் ஆட்சியமைத்தால்..”: மோடியின் அடுத்த சர்ச்சை கருத்து! | செய்திகள்: சிலவரிகளில் | 24.4.2024

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

மேகமோ அவள்.. மேகா ஆகாஷ்!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT