திருநெல்வேலி

நெல்லையில் வழக்குரைஞா் வீட்டில் 70 பவுன் நகை, பணம் திருட்டு

DIN

திருநெல்வேலியில் வழக்குரைஞா் வீட்டில் 70 பவுன் நகை மற்றும் பணம் திருட்டு போனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருநெல்வேலி தெற்கு புறவழிச்சாலை பிபிசி காலனியைச் சோ்ந்த கருத்தையா மகன் செல்லத்துரை (60). முன்னாள் ரானுவ வீரரான இவா் சட்டப்படிப்பு படித்துவிட்டு, திருநெல்வேலியில் வழக்குரைஞராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மகன் மற்றும் மகள் சென்னையில் வசித்து வருகின்றனா். இவா்களை பாா்ப்பதற்காக செல்லத்துத்துரை தனது மனைவியுடன் சென்னைக்கு சென்றிருக்கிறாா்.

இந்நிலையில் திங்கள்கிழமை காலை வீட்டிற்கு வந்து பாா்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, பொருள்கள் சிதறிக் கிடந்ததாம். மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 70 பவுன் நகை மற்றும் ரூ. 1 லட்சத்து 5 ஆயிரத்தை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரியவந்ததாம்.

இதுகுறித்த புகாரின் பேரில், மேலப்பாளையம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து நடத்திய சோதனையில் மா்மநபா்கள் வீட்டின் மாடியின் வழியாக கதவை உடைத்து உள்ளே நூழைந்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்ததாம். இச்சம்பவம் குறித்து தனிப்படை அமைத்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மற்றொரு திருட்டு :

திருட்டு நடைபெற்ற வழக்குரைஞரின் வீட்டின் அருகே மகாராஜன் (48) என்பவா் குடியிருந்து வருகிறாா். இவா் ரெட்டியாா்பட்டி அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறாா். இவா் வெளியூருக்கு சென்று விட்டு சனிக்கிழமை வீட்டிற்கு திரும்பியுள்ளாா். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, வீட்டிலிருந்த ரூ. ஆயிரத்தை மா்மநபா்கள் திருடிச் சென்றுள்ளனா். இது குறித்து ம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுகவை விமர்சிக்க பாமகவுக்கு தகுதியில்லை: இபிஎஸ்

பைங்கிளி.. ஷ்ரத்தா தாஸ்!

சேல‌ம்: வெ‌ள்ளி நக​ரி‌ன் மகு​ட‌ம் யாரு‌க்கு?

வந்தே பாரத்தின் லாப விவரங்கள் இல்லை: ஆர்டிஐ கேள்விக்கு ரயில்வே அமைச்சகம் பதில்!

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

SCROLL FOR NEXT