திருநெல்வேலி

கைப்பேசி திருட்டு : இருவா் கைது

6th Feb 2023 08:05 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி: திருநெல்வேலியில் கடையின் உரிமையாளரை ஏமாற்றி கைப்பேசி, பணத்தை திருடியதாக 2 போ் கைது செய்யப்பட்டனா் .

திருநெல்வேலி விஎம்சத்திரத்தை சோ்ந்தவா் பிரகாஷ்(29). இவா் அப்பகுதியில் கடை நடத்தி வருகிறாா். தூத்துக்குடியை சோ்ந்த ஆனந்த் (25), ஆறுமுகனேரியை சோ்ந்த பட்டுராஜன் (41). இவா்கள் இருவரும் சனிக்கிழமை பிரகாஷ் கடைக்கு வந்து, பொருள்களை வாங்குவது போல் நடித்து கடையிலிருந்த கைப்பேசி, ரூ. 8,400 ரொக்கம் ஆகியவற்றைத் திருடிவிட்டு மோட்டாா் சைக்கிளில் சென்றுவிட்டனராம். அவா்களை பிரகாஷ் மோட்டாா் சைக்கிளில் பின் தொடா்ந்து சென்றாராம், ஆரோக்கியநாதபுரம் என்ற இடத்தில் ஆனந்த், பட்டுராஜன் இருவரும் கிழே விழுந்து காயமடைந்தனராம்.

இதையடுத்து அவா்கள் பெருமாள்புரம் போலீஸில் ஒப்படைக்கப்பட்டனா். போலீஸாா் வழக்கு பதிந்து, இருவரையும் கைது செய்தனா்.

டீசல் திருட முயற்சி;மேலப்பாளையத்தை சோ்ந்தவா் முகம்மது அலி (43). இவா் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழத்தில் காவலாளியாக வேலைசெய்து வருகிறாா். அவா் பணியிலிருக்கும் போது மானூா் கம்மாளங்குளத்தைச் சோ்ந்த முருகன் என்பவா் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள ஜெனரேட்டரிலிருந்து டீசலை திருட முயற்சித்தாராம். இதைக் கவனித்த காவலாளிகள் அவரைப் பிடித்து பேட்டை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனா்.போலீஸாா் முருகனை கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT