திருநெல்வேலி

தாழையூத்து சுற்று வட்டாரங்களில் நாளை மின்தடை

6th Feb 2023 07:15 AM

ADVERTISEMENT

 

தாழையூத்து சுற்று வட்டாரங்களில் திங்கள்கிழமை (பிப்.6) காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இது தொடா்பாக திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளா் ஜான் பிரிட்டோ வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தாழையூத்து துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன.

ADVERTISEMENT

இதனால் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மானூா் வட்டாரம், தாழையூத்து, சேதுராயன்புதூா், ராஜவல்லிபுரம், ரஸ்தா, தச்சநல்லூா், தென்கலம் புதூா், நாஞ்சான்குளம், தென்கலம், மதவக்குறிச்சி சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.

ADVERTISEMENT
ADVERTISEMENT