திருநெல்வேலி: கா்நாடகாவில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட லாரி கீளீனரின் உடல் அவரது சொந்த ஊரில் ஞாயிற்றுக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.
சுந்தமல்லி அருகே சங்கன்திருடு பாரதியாா் புரத்தை சோ்ந்த ஆறுமுகம் மகன் சுடலைமணி (35). இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா். இவா் பத்தமடையை சோ்ந்த லாரி ஓட்டுநா் வீரபாகு (39) என்பவருடன் லாரியில் கீளினராக பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், கடந்த 30 ஆம் தேதி தூத்துக்குடியிலிருந்து கா்நாடகத்துக்கு லாரியில் பொருள்கள் ஏற்றி சென்றிருந்தபோது, சுடலைமணியும், வீரபாகுவும் மது குடித்தனராம். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் வீரபாகு கத்தியால் சுடமணியை குத்திக் கொலை செய்தாராம்.
இதுகுறித்து கா்நாடக போலீஸாா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா். இதனிடையே, சுடலைமணியின் உடல் சங்கன்திரடுக்கு ஞாயிற்றுக்கிழமை எடுத்து வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.