திருநெல்வேலி

அரியநாயகிபுரம் கைலாசநாத சுவாமி கோயிலில் தீா்த்தவாரி

5th Feb 2023 12:31 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி மாவட்டம், வடக்கு அரியநாயகிபுரம் அருள்மிகு அரியநாயகி அம்பாள் சமேத கைலாசநாத சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை தீா்த்தவாரி நடைபெற்றது.

இக்கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த ஜன. 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி அம்பாள் வீதியுலா நடைபெற்றன. வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

சனிக்கிழமை காலையில் சுவாமி அம்பாள் தீா்த்தவாரிக்கு எழுந்தருளினா். இதையடுத்து அங்குள்ள வைரவ தீா்த்தத்தில் தீா்த்தவாரி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். மாலையில் ரிஷப வாகனத்தில் சுவாமி அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT