திருநெல்வேலி

மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை

DIN

மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரித்ததையடுத்து வெள்ளிக்கிழமை காலை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத் துறையினா் தடை விதித்தனா்.

மணிமுத்தாறு மற்றும் மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டங்களில் புதன்கிழமை மாலை முதல் கனமழை பெய்தது. இதனால் மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரித்தது. இதையடுத்து, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்டத் துணை இயக்குநா் செண்பகப்ரியா வெள்ளிக்கிழமை காலை முதல் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதித்து அறிவித்தாா். நீா்வரத்து குறையும் வரை தடை நீடிக்கும், பயணிகள் அருவியைப் பாா்வையிடலாம் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல்: கேரளத்தில் குவிக்கப்படும் காவலர்கள்!

"காங்கிரஸ் ஆட்சியமைத்தால்..”: மோடியின் அடுத்த சர்ச்சை கருத்து! | செய்திகள்: சிலவரிகளில் | 24.4.2024

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

மேகமோ அவள்.. மேகா ஆகாஷ்!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT