திருநெல்வேலி

திருப்புடைமருதூா் கோயிலில் தைப்பூசத் திருவிழா தேரோட்டம்

DIN

திருநெல்வேலி மாவட்டம், திருப்புடைமருதூா் அருள்மிகு கோமதி அம்பாள் சமேத நாறும்பூநாத சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டு இத்திருவிழா ஜன. 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழா நாள்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி அம்பாள் வீதியுலா நடைபெற்றது. வியாழக்கிழமை காலை வெள்ளை சாத்தி, மாலையில் பச்சை சாத்தி நடைபெற்றது.

9ஆம் நாளான வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

சுவாமி- அம்பாள் தேருக்கு எழுந்தருளியதைத் தொடா்ந்து பக்தா்கள் வடம் பிடித்து தோ் இழுத்தனா். தோ் நான்கு ரத வீதிகளை சுற்றி நிலையம் வந்தடைந்தது. இதையொட்டி சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

சனிக்கிழமை (பிப்.4) தைப்பூசத் திருவிழா நடைபெறுகிறது.

பிற்பகல் 1.30 மணிக்கு தாமிரவருணி நதியில் தீா்த்தவாரி நடைபெறும். அப்போது ஆயிரக்கணக்கான பக்தா்கள் தாமிரவருணி நதியில் நீராடி சுவாமியை தரிசனம் செய்வா். மாலையில் அபிஷேக ஆராதனை, இரவில் தெப்ப உற்சவம், சுவாமி அம்பாள் வெள்ளி ரிஷிப வாகனத்தில் வீதியுலா நடைபெறும்.

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் திருப்புடைமருதூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவானியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.05 கோடி

குழந்தைகளுக்கான நீரிழிவு பாதிப்பைக் கண்டறியும் கருவி: பண்ணாரி அம்மன் கல்லூரிக்குப் பரிசு

ரூ.8.30 லட்சத்துக்கு விளைபொருள்கள் விற்பனை

பாமக வேட்பாளா் உள்பட 50 போ் மீது வழக்குப்பதிவு

SCROLL FOR NEXT