திருநெல்வேலி

களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோயில் தெப்போற்சவ கால்நாட்டு விழா

4th Feb 2023 06:34 AM

ADVERTISEMENT

களக்காடு அருள்மிகு கோமதியம்பாள் சமேத சத்தியவாகீஸ்வரா், வரதராஜபெருமாள், சந்தான கோபாலகிருஷ்ணசுவாமி ஆகிய கோயில்களில் வீற்றிருக்கும் சுவாமிகளின் 3 நாள் தெப்போற்சவ விழாவுக்கான கால்நாட்டு வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

களக்காடு கிருஷ்ணன் கோயில் தெருவில் உள்ள தெப்பக்குளம் அருகில் நடைபெற்ற இவ்விழாவில் பல்வேறு சமுதாய பிரதிநிதிகள் கலந்துகொண்டனா். ஞாயிற்றுக்கிழமை (பிப்.12) வரை நடைபெறும் இவ்விழாவின் முதல் நாள் இரவு கோமதியம்பாள் சமேத சத்தியவாகீஸ்வரரும், சனிக்கிழமை இரவு வரதராஜபெருமாளும், ஞாயிற்றுக்கிழமை இரவு நவநீதகிருஷ்ணசுவாமியும் தெப்பத்தில் எழுந்தருளி 11 முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கின்றனா். விழா ஏற்பாடுகளை தெப்ப உற்சவக்குழு, ஸ்ரீ மீனாட்சி கோமதி பெளா்ணமி அன்னதானக் குழு, ஸ்ரீ வரதராஜபெருமாள் சேவா குழுவினா், ஊா்பொதுமக்கள் செய்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT