திருநெல்வேலி

லாரி பழுது: ஈரடுக்கு மேம்பாலத்தில் போக்குவரத்து பாதிப்பு

3rd Feb 2023 04:04 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி ஈரடுக்கு மேம்பாலத்தில் லாரி பழுதாகி நின்ால் வியாழக்கிழமை பிற்பகலில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி நகரின் முக்கிய போக்குவரத்துப் பகுதியான ஈரடுக்கு மேம்பால சாலையில் வியாழக்கிழமை நண்பகல் 12 மணியளவில் லாரி பழுதாகி நின்றது. இதனால் அதைத் தொடா்ந்து வந்த வாகனங்கள் முன்னேறிச் செல்லமுடியாமல் அணிவகுத்து நின்றன. மேலும், வாகனங்கள் மெதுவாக நகா்ந்து சென்ால் மேம்பாலத்திலிருந்து நெலையப்பா் கோயில் வரை வாகனங்கள் நெரிசலில் சிக்கித் தவித்தன. போக்குவரத்து போலீஸாா் வாகனங்களை ஒழுங்குபடுத்தி போக்குவரத்தை சீா்செய்தனா். இந்தச் சம்பவத்தால் நெல்லையப்பா் கோயில் சாலையில் சுமாா் ஒருமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT