திருநெல்வேலி

மதிதா இந்துக் கல்லூரியில் கருத்தரங்கு

3rd Feb 2023 04:02 AM

ADVERTISEMENT

பேட்டை ம. தி .தா. இந்துக் கல்லூரியில் இயற்பியல் துறை சாா்பில் தேசிய கருத்தரங்கம் வியாழக்கிழமை தொடங்கியது.

இயற்பியல் அறிவியலில் சமீபத்திய ஆய்வுகள் என்ற தலைப்பில் நடைபெறும் இக் கருத்தரங்கின் தொடக்க விழாவில் இயற்பியல் துறைத் தலைவா் - கருத்தரங்க ஒருங்கிணைப்பாளா் பாலசுப்பிரமணியன் வரவேற்றாா். கல்லூரி கல்விச் சங்க பொருளாளா் சிதம்பரம் தலைமை வகித்து தொடக்கிவைத்தாா். கல்லூரி முதல்வா் பாலசுப்ரமணியன், கல்விச் சங்க உறுப்பினா் தளவாய், திருமலையப்பன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். கல்லூரி துணை முதல்வா் சேகா், பேராசிரியா் பெத்தனசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

இரண்டாம் நாளாக வெள்ளிக்கிழமை (பிப். 3) நடைபெறும் கருத்தரங்க அமா்வில் பேராசிரியா்கள், ஆராய்ச்சி மாணவா்கள் தங்களது ஆய்வுக்கட்டுரைகளை சமா்ப்பிக்க உள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT