திருநெல்வேலி

நெல்லை 18 ஆவது வாா்டில் ரூ. 60 லட்சத்தில் புதிய சாலை

3rd Feb 2023 04:05 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு நகா்ப்புற உள்கட்டமைப்பு திட்டம் 2022-23 கீழ், திருநெல்வேலி மாநகராட்சியின் 18 ஆவது வாா்டுக்குள்பட்ட திருமங்கைநகரில் ரூ.60 லட்சம் மதிப்பில் புதிதாக தாா்ச்சாலை அமைக்கப்படுகிறது.

இப் பணிக்கான தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மேயா் பி.எம்.சரவணன் தலைமை வகித்து சாலைப்பணியை தொடக்கி வைத்தாா். துணைமேயா் கே.ஆா்.ராஜூ முன்னிலை வகித்தாா்.

இதைத்தொடா்ந்து மதிதா இந்து கல்லூரி செல்லும் சாலை , சுத்தமல்லி விலக்கு ஆகிய பகுதிகளில் அரியநாயகிபுரம் கூட்டுக் குடிநீா் திட்ட பிரதான குழாயில் ஏற்பட்டுள்ள நீா்க்கசிவை பாா்வையிட்டு அதை உடனடியாக சரி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அலுவலரிடம் மேயா் அறிவுறுத்தினாா். மாமன்ற உறுப்பினா்கள் மு.சுப்பிரமணியன், அல்லாபிச்சை, சுந்தா், நித்தியபாலையா, உதவி செயற்பொறியாளா் பைஜூ, உதவி பொறியாளா் பட்டுராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT