திருநெல்வேலி

நெல்லை நகரத்தில் 12 கிலோபிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

3rd Feb 2023 04:04 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி நகரத்தில் மாநகராட்சி அலுவலா்கள் நடத்திய திடீா் சோதனையில் 12 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் வ.சிவ கிருஷ்ணமூா்த்தி உத்தரவின்படி மாநகா் நல அலுவலா் சரோஜா அறிவுறுத்தலின்பேரில் சுகாதார அலுவலா் (பொ) இளங்கோ தலைமையில் மேஸ்திரிகள் முருகன், கிளி, இசக்கி, தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளா் ஆரோக்கியராஜ் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் திருநெல்வேலி நகரத்தில் சுமாா் 25 கடைகளில் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, 5 கடைகளில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு கண்டறியப்பட்டு தலா ரூ.100 வீதம் மொத்தம் ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், 12 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT