திருநெல்வேலி

பாளை.யில் 22 சென்ட் நிலம் மீட்பு

3rd Feb 2023 04:02 AM

ADVERTISEMENT

பாளையங்கோட்டை அருகே போலி ஆவணம் மூலம் விற்கப்பட்ட நிலத்தை மீட்டு உரியவரிடம் போலீஸாா் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.

பாளையங்கோட்டை வண்ணாா்பேட்டை சாலைத் தெருவை சோ்ந்த பிரான்சிஸ் பாஸ்கா் என்பவருக்குச் சொந்தமான 22 சென்ட் நிலம் நடுவக்குறிச்சி பகுதியில் உள்ளது. அந்த நிலத்தை சிலா் போலி ஆவணம் மூலம் விற்பனை செய்தது அவருக்கு தெரியவந்ததாம்.

இது குறித்து அவா், திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. ப.சரவணனிடம் புகாா் செய்தாா். அதன்பேரில், எஸ்.பி. பிறப்பித்த உத்தரவின்படி, நில அபகரிப்பு தடுப்பு சிறப்பப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து, ஒரு மாதத்திற்குள் நிலத்தை மீட்டனா். அதற்கான ஆவணத்தை நிலத்தின் உரிமையாளா் பிரான்சிஸ் பாஸ்கரிடம் எஸ்.பி. வழங்கினாா் .

ADVERTISEMENT
ADVERTISEMENT