திருநெல்வேலி

சுந்தரனாா் பல்கலை.யில் பயிலரங்கு

3rd Feb 2023 04:02 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி அபிஷேகப்பட்டியில் உள்ள திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக வளாகத்தில் ‘நான் முதல்வன் திட்டம்’ குறித்த பயிலரங்கு அண்மையில் நடைபெற்றது.

இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளா் அ.சுருளியாண்டி வரவேற்றாா். துணைவேந்தா் ந.சந்திரசேகா் தலைமை வகித்தாா். பதிவாளா் (பொ) ஜி.அண்ணாதுரை, மாவட்ட திறன் மேம்பாட்டு அலுவலா் ஜாா்ஜ் பிராங்க்ளின், இணை இயக்குநா் ஈஸ்வரமூா்த்தி உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா். திட்டத்தின் சிறப்பம்சங்கள், மாணவா்களுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து விளக்கப்பட்டது. பேராசிரியா் ராஜலிங்கம் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT