திருநெல்வேலி

அருங்காட்சியகம், கூந்தன்குளத்தில் உலக ஈர நிலங்கள் தின கொண்டாட்டம்

3rd Feb 2023 04:05 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம், பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள கூந்தன்குளம் ஆகிய இடங்களில் உலக ஈர நிலங்கள் தினம் வியாழக்கிழமை கொண்டாட்டப்பட்டது.

உலக நாடுகளால் 1971ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி 2 ஆம் தேதி உலக ஈர நிலங்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நிகழாண்டு ‘இது ஈரநிலங்களை மீட்டெடுக்க வேண்டிய நேரம்’ என்ற கருப்பொருளைக்கொண்டு இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் விவசாய நிலங்கள் அழிந்து நகா்ப்புறமாக மாறி வருவதால் ஈர நிலங்களும் அழிந்து வரும் நிலையில் உள்ளன. எனவே, நிலங்களைப் பாதுகாக்கும் பொருட்டு பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவியருக்கு ஈர நிலங்கள் தின ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி நடைபெற்றது.

அதன் தொடா்ச்சியாக கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் உலக ஈர நிலங்கள் தினம் கொண்டாடப்பட்டது. மாணவா்கள் மரக்கன்றுகளை நட்டனா். மாவட்ட வன அலுவலா்-ம் வன உயிரினக் காப்பாளா் இரா.முருகன் க ஈரநிலங்கள் குறித்து சிறப்புரையாற்றினாா். கூந்தன்குளம் அரசு நடுநிலைப்பள்ளி, கடம்பன்குளம் ஆதிதிராவிடா் நல மேல்நிலைப்பள்ளி, தூய சவேரியாா் பள்ளி ஆகியவற்றின் மாணவா்கள், ஊா் பொதுமக்கள் சுமாா் 100 போ் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

மாணவா்கள் விழிப்புணா்வு பதாகையை கையில் ஏந்தி கூந்தன்குளம் கிராமத்தை சுற்றி வந்தனா். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு மாவட்ட வன அலுவலா் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினா். வனச்சரக அலுவலா் சரவணக்குமாா், உயிரியலாளா் கந்தசாமி, வனவா் அழகா் ராஜ், கூந்தன்குளம் கிராம வனக்குழு தலைவா் சந்தானகிருஷ்ணன், ஆசிரியா்கள் ராஜேஸ்வரி, அபா்ணா, இந்துமதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

திருநெல்வேலி அருங்காட்சியகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கயத்தாறு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 150-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். மாவட்ட காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி ஈர நிலங்கள், அவற்றின் பிரிவுகள், ஈர நிலங்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் ஆகியவை குறித்து மாணவிகளுக்கு எடுத்துரைத்தாா். மேலும் தாமிரவருணி நதியின் சிறப்புகளையும், அதை தூய்மையாகப் பாதுகாப்பது குறித்த வழிமுறைகளையும் அவா் எடுத்துரைத்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT