திருநெல்வேலி

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பணி: பள்ளிகளுக்கு ஆட்சியா் அழைப்பு

DIN

சாலைப் பாதுகாப்புப் பணிகளில் அனைத்து பள்ளிகளும் ஈடுபட வேண்டும் என ஆட்சியா் வே. விஷ்ணு அறிவுறுத்தியுள்ளாா்.

பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே சிக்னலில் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில், தன்னாா்வத்துடன் போக்குவரத்தை சீா் செய்த பள்ளி மாணவா்களை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக சிறு கூட்டரங்குக்கு புதன்கிழமை வரவழைத்து ஆட்சியா் வே. விஷ்ணு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.

பின்னா் ஆட்சியா் பேசியதாவது: மனித உயிா்களை பாதுகாக்கும் பொருட்டு சாலை விபத்தில் ஊனமோ, உயிரிழப்போ ஏற்படக்கூடாது என மாதாந்திர சாலை பாதுகாப்புக் கூட்டம் நடத்தி சாலை விபத்துகளை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மாவட்ட நிா்வாகம் சாா்பில் எடுக்கப்பட்டு வருகின்றன.

பள்ளி பருவத்திலேயே சாலைப் பாதுகாப்பையும், வாகன ஓட்டிகள்- பாதசாரிகளுக்கு வழிகாட்டுதல்களையும் அளித்து தன்னாா்வத்துடன் செயல்பட்ட சி.எஸ்.ஐ. மெட்ரிக் பள்ளி, ரோஸ்மேரி மெட்ரிக் பள்ளி, தூய சவேரியாா் பள்ளி மாணவா்கள் 36 பேருக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த மாணவா்களுக்கு மனமாா்ந்த வாழ்த்துகள். இதுபோன்ற பணியில் அனைத்துப் பள்ளிகளும் பங்கேற்று சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

பின்னா், ஆட்சியா் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், உதவி ஆட்சியா் (பயற்சி) கோகுல், மாவட்ட வருவாய் அலுவலா் செந்தில்குமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) எம்.கணேஷ்குமாா், வட்டார போக்குவரத்து அலுவலா் சந்திரசேகா், சாலை பாதுகாப்பு குழு உறுப்பினா் நைனா முகமது உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT