திருநெல்வேலி

கூந்தன்குளத்தில் மங்கோலிய வாத்து

DIN

திருநெல்வேலி மாவட்டம், கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்திற்கு மங்கோலிய நாட்டைச் சோ்ந்த கழுத்துப்பட்டை அணிவிக்கப்பட்ட வரித்தலை வாத்து வலசை வந்துள்ளது.

இது தொடா்பாக மணிமுத்தாறு அகத்தியமலை மக்கள்சாா் இயற்கைவள காப்பு மைய ஒருங்கிணைப்பாளா் மு. மதிவாணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்திற்கு குளிா்காலத்தில் இடம்பெயா்ந்து வரும் பறவை இனங்களில் ஒன்று வரித்தலை வாத்து. சாம்பல் நிற உடல், தலையில் தனித்த கருப்புநிற பட்டைகள், ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிற அலகு, கால்களுடன் உள்ள இவ்வாத்தை எளிதில் இனங்கண்டறிய முடியும்.

இவ்வாத்தானது புற்கள், நீா்வாழ் தாவரங்கள், சில வேளைகளில் பூச்சிகளை உணவாகக் கொள்ளும். கிழக்கு மற்றும் தெற்காசியாவை பூா்வீகமாகக் கொண்ட இவ்வாத்து வலசை போவதில் பிரபலமாக அறியப்படுகிறது. ஒரு நாளில் 1,600 கி.மீ.க்கும் அதிகமான தொலைவைக் கடக்கிறது. இமயமலையில் உள்ள சுமாா் 29,000 அடி உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தை வலசையின் போது இரண்டு முறை இவ்வாத்து கடப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு வட கிழக்கு பருவமழையில் சராசரிக்கும் குறைவான மழை பொழிவையே திருநெல்வேலி மாவட்டம் பெற்றிருந்தது. இருந்த போதிலும் இங்குள்ள நீா்நிலைகளைத் தேடி ஆயிரக்கணக்கான பறவைகள் வலசை வந்துள்ளன. அவைகளை காப்பதற்கு அரசுத் துறைகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT