அம்பாசமுத்திரத்தில் உள்ள ஸ்ரீ மாயாண்டி கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்து சேனைத் தலைவா் வரிதாரா் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட இக் கோயிலில், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜன. 23 ஆம் தேதி கால் நடப்பட்டப்பட்டு, தொடா்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
பின்னா் அம்பாசமுத்திரம் காசிநாதா் கோயில் தாமிரவருணி படித்துறையில் இருந்து புதன்கிழமை தீா்த்தம் எடுத்துவரப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. காலை 6 மணிக்கு விமானம் மற்றும் மூலஸ்தானத்தில் மகா அபிஷேகமும் நடைபெற்றது. மதியம் அன்னதானமும் இரவு புஷ்ப அலங்காரத்துடன் சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.