திருநெல்வேலி

பாபநாசம் அணையில் 10 அடி நீள முதலை

2nd Feb 2023 12:31 AM

ADVERTISEMENT

பாபநாசம் அணையில் சுமாா் 10 அடி நீள முதலை நீந்திச் சென்ற விடியோ சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.

திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பாபநாசம் அணை. இந்த அணையில் முதலை இருப்பதாக அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. சமீப காலங்களில் முதலை தென்படவில்லை. இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு அணையில் முதலை நீந்திச் செல்வதைப் பாா்த்து கைப்பேசியில் விடியோவாகப் பதிவு செய்துள்ளனா்.

சுமாா் 10 அடி நீளம் உள்ள முதலை, நீரில் நீந்திச் செல்வது தெளிவாக விடியோவில் பதிவாகியுள்ளது. இந்த விடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT