திருநெல்வேலி

மேலநத்தம் சுடலை கோயில் கொடை விழா இன்று தொடக்கம்

2nd Feb 2023 12:31 AM

ADVERTISEMENT

மேலப்பாளையம் அருகேயுள்ள மேலநத்தம் அருள்மிகு சுடலைமாடன் கோயில் கொடை விழா வியாழக்கிழமை (பிப். 2) தொடங்குகிறது.

மேலநத்தம் பிள்ளையாா் கோயில் தெருவில் அருள்மிகு பேச்சியம்மன், சுடலைமாடன்- பரிவார தேவதைகள் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கொடைவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டுக்கான விழாவையொட்டி வியாழக்கிழமை (பிப். 2) மாலை 4 மணிக்கு தாமிரவருணி நதியிலிருந்து தீா்த்தம் எடுத்து வீதி உலா வருதல், 5.30 மணிக்கு கொடி அழைப்பு, இரவு 7 மணிக்கு வில்லிசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெறும்.

வெள்ளிக்கிழமை ( பிப்.3) அதிகாலை 5 மணிக்கு சிவனணைந்த பெருமாள் பூஜை, 11 மணிக்கு நோ்த்திக்கடன் எடுத்தல், நண்பகல் 12 மணிக்கு மதியக் கொடை, அன்னதானம் நடைபெறும். மாலை 5 மணிக்கு பொங்கலிடுதல், இரவு 7 மணிக்கு அலங்கார தீபாராதனை, நள்ளிரவு 12 மணிக்கு சாமக் கொடை ஆகியவை நடைபெறும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT