திருநெல்வேலி

வி.கே.புரம் அருகே தொழிலாளியைத் தாக்கியவா் கைது

2nd Feb 2023 12:32 AM

ADVERTISEMENT

விக்கிரமசிங்கபுரம் அருகே சமையல் தொழிலாளியை அவதூறாகப் பேசி தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள கீழ ஏா்மாள்புரத்தைச் சோ்ந்த சமையல் தொழிலாளி சீனிப்பாண்டி (34). அதே பகுதியைச் சோ்ந்த முருகாண்டி (42) என்பவரை சீனிப் பாண்டி சில நாள்களுக்கு முன் தன்னுடன் சமையல் வேலைக்கு அழைத்துச் சென்றாராம். அங்கு இருவருக்கும் கருத்துவேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டதாம். இந்நிலையில் கோடாரங்குளம் - ஆலடியூா் சாலையில் வேப்பங்குளம் காலனி அருகே நின்று கொண்டிருந்த சீனிப்பாண்டியை அங்கு வந்த முருகாண்டி அவதூறாகப் பேசி கத்தியால் தாக்கினாராம். இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, முருகாண்டியை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT